இடதுசாரிகளை அடையாளம் காண சுற்றறிக்கை? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

 

 

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் கிராமங்களில் உள்ள இடதுசாரிகளை அடையாளம் கண்டு தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக எழுந்த புகார் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

 

இந்த சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் வட்டாட்சியரால் அனுப்பப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

வட்டாட்சியர் அனுப்பியதாக கூறப்படும் சுற்றறிக்கை தொடர்பான இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

மாணவர் போராட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!

Read Next

திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular