தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கான டெண்டரில் மொத்தம் 11 நிறுவனங்கள் பங்கேற்றதாக அரசு தெரிவித்துள்ளது.
ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து, BIS தரமுத்திரை உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்கு ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு பைசா என குறைந்த விலைப்புள்ளி கோரியுள்ளது.
இதே விலைக்கு கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனமும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜாய் ஆலுக்காஸுக்கு 70 சதவீதமும், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு 30 சதவீதமும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த டெண்டர் விவரம் தற்போது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.




