‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அண்ணாமலை, வரும் செப்டம்பர் மாதம் பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் ஹவுன்ஸ்லோவில் உள்ள கிரான்ஃபோர்ட் சமூகக் கல்லூரியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
அந்நிகழ்ச்சியில் “பெண்களின் தொலைநோக்குப் பார்வையும் தலைமைத்துவமும் 2026” என்ற தலைப்பில் அண்ணாமலை உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




