ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பலபு சுதாகர் (36), அவரது இரு சகோதரிகள் மற்றும் 15 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீசைலத்தில் உள்ள ஓட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் அவர்கள் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அருகிலிருந்தவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது 5 பேரும் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.




