விழுப்புரம் அருகே சாலாமேடு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அஜிஸ்கான் (40) என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விளையாடிக் கொண்டிருந்தபோதே ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




