தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆபரேட்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். செட் டாப் பாக்ஸ்களுக்கு ரீசார்ஜ் செய்ய முடியாததால், புதிய இணைப்புகளை வழங்குவதிலும், பழுதடைந்த பாக்ஸ்களை மாற்றுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அரசு கேபிள் டிவி சேவையை நம்பியுள்ள சுமார் 12 லட்சம் சந்தாதாரர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்னையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப உதவியாளர்கள் மூலம் பிரச்னையை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.




