
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மொபைல் ரீசார்ஜ் கட்டணம் 20 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் உலா வந்தன. அதன்படி இந்த மாத தொடக்கத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் 10% முதல் 23% சதவீதம் வரை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டனர். இதன் விளைவாக இந்த நிறுவனங்களின் பயனர்கள் BSNL க்கு மாறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து 2.50 லட்சம் பேர் தங்களது எண்களை BSNL – க்கு மாற்றியுள்ளனர். மேலும் 25 லட்சம் பேர் புதிதாக BSNL சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். தற்போது 4G சேவையை வழங்கி வரும் BSNL விரைவில் 5G சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.