Trade apprentices பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 437 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
Trade apprentices பணிக்கென காலியாக உள்ள 437 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தியான மற்றும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.12,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் ITI மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.ecil.co.in/jobs/Advt_ITI_20_2024.pdf
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது Tamil Yugam News (www.tamilyugam.in) இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.




