Wi-Fi-யை கண்டுபிடித்தது யார் தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி..!!

 

 

இன்று உலகம் முழுவதும் இணைய இணைப்பின் முக்கிய அடித்தளமாக இருக்கும் Wi-Fi தொழில்நுட்பம், ஆஸ்திரேலியாவின் CSIRO அமைப்பில் பணியாற்றிய விஞ்ஞானி ஜான் ஓ’சுல்லிவன் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவால் 1990-களில் உருவாக்கப்பட்டது. இதற்கு அடித்தளமாக அமைந்தது, 1940-களில் நடிகையும் கண்டுபிடிப்பாளருமான ஹேடி லமார் உருவாக்கிய ‘ஃபிரீக்வென்சி ஹோப்பிங்’ (Frequency Hopping) தொழில்நுட்பமாகும். இந்த கண்டுபிடிப்பு பின்னாளில் வயர்லெஸ் தகவல் பரிமாற்ற வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. அதன் தொடர்ச்சியாக, 1997-ஆம் ஆண்டு IEEE 802.11 என்ற சர்வதேச தரநிலையுடன் Wi-Fi தொழில்முறை பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் என உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இன்றியமையாத தொழில்நுட்பமாக Wi-Fi திகழ்கிறது.

Read Previous

துப்பாக்கி சுடும் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்… துப்பாக்கி ஏந்தி பயிற்சியிலும் அசத்தல்..!!

Read Next

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ₹30 லட்சம்.. முதலமைச்சர் விஜயின் பாராட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular