அலுவலகத்தில் இருக்கும் கணவனுக்கு மெஸேஜ் அனுப்பினார் அவர் மனைவி..!! படித்ததில் சிரித்தது..!!

அலுவலகத்தில் இருக்கும் கணவனுக்கு மெஸேஜ் அனுப்பினார் அவர் மனைவி

மனைவி : என்னங்க , வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வாங்க, அப்படியே சுகன்யா உங்களுக்கு ஹாய் சொல்ல சொல்றா… ( இது மனைவியின் மெசேஜ்)

கணவன் : யாரு சுகன்யா , எனக்கு ஹாய் சொல்ல சொல்றது..

மனைவி : அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, நீங்க மெஸேஜ் படிச்சிட்டீங்களான்னு கன்பார்ம் பண்றதுக்காகத்தான் அப்படி நான் போட்டு அனுப்பிச்சேன்…

இதுக்கு மேல தான் ட்விஸ்ட்டே…

கணவன் : இல்ல, நான் இங்க சுகன்யா கூடத்தான் இருக்கேன் , நீ எந்த சுகன்யாவை சொல்றேன்னு தெரியல , அதான் கேட்டேன்…

மனைவி : இப்போ நீங்க எங்க இருக்கீங்க???

கணவன் : காய் கறி கடையில…

மனைவி : அங்கேயே இருங்க 10 நிமிஷத்துல வர்றேன்…

கணவன் : சரி சீக்கிரம் வா…

10 நிமிஷத்துல வர்றேன்னு சொன்ன மனைவி 5 நிமிஷத்துல காய்கறி கடைகிட்ட வந்து திரும்பி கணவனுக்கு கால் பண்றாங்க…

மனைவி : எங்க இருக்கீங்க??

கணவன் : நீ எங்க இருக்க??

மனைவி : காய்கறி கடையில… நீங்களும் அவளும் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க மொதல்ல…

கணவன் : நான் இன்னமும் ஆபீஸ் ல தான் இருக்கேன் செல்லம்.. நீதான் காய்கறி கடைக்கு வந்துட்டல்ல , அப்டியே உனக்கு என்ன வேணுமோ வாங்கிட்டு போயிடு… நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டாப்ல..

Read Previous

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பதிவு..!! படித்ததில் ரசித்தது..!!

Read Next

ஒரு பெண்ணின் டைரியில் இருந்த கண்ணீர் வர வைக்கும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular