ஆற்றில் மூழ்கிய 5 பேர்..!! 2 பேர் உடல்கள் மீட்பு..!!
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த சென்னையைச் சேர்ந்த 5 பேர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் மூழ்கிய கலையரசன் (20), கிஷோர் (20) இருவரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், தண்ணீரில் மூழ்கிய பிராங்கிளின் (23), மனோகரன் (19), ஆண்டோ (20) ஆகியோரை தீயணைப்பு படையினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து இளைஞர்களும் பூண்டி மாதா கோயிலுக்கு வந்த போது கொள்ளிடம் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர்.




