இந்த அல்வாவை செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

தின்பண்டங்கள் என்றாலே நமக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் அல்வா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இன்று சுவையான மற்றும் சத்தான தினை கருப்பட்டி அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்:

கருப்பட்டி – 150 கிராம்,

தினை அரிசி – 200 கிராம்,

முந்திரி – 20 கிராம்,

உலர் திராட்சை – 20 கிராம்,

பாதம், பிஸ்தா – தலா 20 கிராம்,

நெய் – 100 கிராம்,

தண்ணீர் – 250 மி.லி,

ஏலக்காய் தூள் – தேவையான அளவு,

சுக்கு – 1 கரண்டி

செய்முறை:

திணை அரிசியை ஆறு மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கருப்பட்டியை நன்றாக பொடி ஆக்க வேண்டும்.

கருப்பட்டியில் தண்ணீர் சேர்த்து பாகு போல காய்ச்சவும். அரிசி ஊறியதும் அதனை அரைத்து வைத்து பால் எடுக்கவும். பாலை 15 நிமிடம் தெளிய விட்டு நீரை எடுத்து விட வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி தினை மாவு கருப்பட்டி பாகு நெய் ஊற்றி அல்வா பதத்திற்கு தயார் செய்யவும்.

அல்வா பதத்திற்கு வந்த பிறகு நெய் சேர்த்து பாதாம், பிஸ்தா முந்திரி உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து ஆரிய பின்பு துண்டுகளாக வெட்டி எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான தினை கருப்பட்டி அல்வா தயார்..!!

Read Previous

மஞ்சள் துணியில் இதை மட்டும் வைத்தால் போதும்..!! கோடி ரூபாய் கடனும் தீரும்..!!

Read Next

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்த பின் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular