இந்த காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பெரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
முருங்கைக்காய் சாப்பிடுவதன் மூலம் ஆண்களின் விந்துவை விருத்தி செய்வது மட்டுமல்லாமல் தாம்பத்திய உறவிற்கும் குழந்தை பாக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது, கோவைக்காய் சாப்பிடுவதன் மூலம் வாய் நாக்கு குடலில் உள்ள புண்களை சரி செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது, வாழைத்தண்டு சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் கல் நீக்குகிறது, வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் மூளை வளர்ச்சி அதிகப்படுத்தி கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, உருளைக்கிழங்கு சாப்பிடுதல் மூலம் மலச்சிக்கலை சரி செய்ய முடியும், இதற்கு நிகராக வாழைப்பூ சாப்பிடுவதன் மூலமும் மலச்சிக்கல் நீங்குகிறது, பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் தனது கட்டுக்குள் வைக்கிறது, சுரக்காய் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்து உடலுக்கு தேவையான நீரை தருகிறது மேலும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும், பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து உடலையும் முகத்தையும் பளபளப்பாக வைத்திருக்கும், சேப்பக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் எலும்பு மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கும் மேலும் இந்த காய்கறிகளை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!