இனி, நீங்கள் அபராதம் செலுத்த தேவையில்லை..!! வந்தாச்சு EPFO திட்டத்தின் சூப்பர் நியூஸ்..!!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி(EPFO) ஆணையத்தின்  EPFO திட்டமானது,  2017-2024 ஆண்டுகளில் EPFO-வில் இணங்காத நிறுவனங்களுக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் நிதி சுமை அல்லது  வேறு ஏதேனும் காரணத்தால் EPFO பதிவு செயல்முறையை முடிக்க முடியாத நிறுவனங்கள் மீண்டும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது EPFO Amnesty திட்டத்தின் கீழ், EPF கணக்கில் பங்களிப்பு செலுத்தாத நிறுவனங்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, EPF கணக்கில் கடந்த கால நிலுவை தொகையை செலுத்த  வேண்டிய நிறுவனங்களுக்கு எந்த ஒரு அபராதமும் வசூலிக்கப்படாது என்றும் தொகை செலுத்தும் கால வரையறை வரை உறுப்பினர்களுக்கு வட்டி வழங்கப்படும் என்றும் EPFO ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த மாதம் ஏப்ரல் 28 ம் தேதி EPFO -வில் இணைக்கப்பட்ட “EDLI” காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது , இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பட்சத்தில், அவர் நாமினிக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.

Read Previous

உங்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்க அடிக்கடி இதை சாப்பிட்டாலே போதும்..!!

Read Next

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம்..!! முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular