பஞ்ச பூதங்களின் அடிப்படையில்தான் வாஸ்து சாஸ்திரம் அமைகிறது. வாஸ்து சாஸ்திரம் ஒருவருடைய வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை கொடுக்கின்றன. நம் வீட்டில் பொருட்கள் எந்த திசையில், எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை கவனமாக சரியான இடத்தில் வைக்க வேண்டும்.
சிலர் ஒரு வீட்டை கட்ட தொடங்கும்போது வாஸ்து பார்த்துதான் வீட்டை கட்டத் தொடங்குகிறார்கள். இப்படி வாஸ்து பார்த்து வீட்டை கட்டினால் பாசிடிவ் எனர்ஜி வீட்டை சுற்றி நிறைந்திருக்கும்.
நமக்கு தொடர்ந்து பணப்பிரச்சினை ஏற்பட்டால் அது வாஸ்து பிரச்சினையாகத்தான் இருக்கும். நமக்கு ஏற்படும் பிரச்சினைக்கும், வீட்டில் நாம் வைத்திருக்கும் பொருட்களுக்கும் தொடர்ந்து இருக்கும்.
கவலை வேண்டாம் வாஸ்து சாஸ்திரம் மூலம் அவற்றை சரி செய்து கொள்ளலாம். எப்படி சரிசெய்யலாம் என்று பார்ப்போம் -
பணம் சேர இந்த 5 விஷயங்களை செய்யுங்கள் –
- உங்கள் வீட்டில் தென்கிழக்கு மூலையில் நீர் தொடர்பான பொருள் இருந்தால் உடனே அதை அகற்றிவிடுங்கள். அந்த திசையில் சிவப்பு நிறத்தில் பல்பு மாட்டுங்கள்.
- வடகிழக்கு திசை தான் ஒவ்வொரு வீட்டில் புனிதமான திசையாக கருதப்படுகிறது. இதனால், வடகிழக்கு திசை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
- வடகிழக்கு மூலையில் வாட்டர் ஃபவுண்டைன் வைத்தால், நமக்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.
- உங்கள் வீட்டில் பீரோ அல்லது பணம் வைக்கும் பெட்டியை வடதிசை நோக்கி வையுங்கள். அப்படி இல்லையென்றால் கிழக்கு திசையில் வையுங்கள். இப்படி செய்தால் பண வரவு அதிகரிக்கும்.
- உங்கள் வீட்டில் பித்தளை அல்லது வெள்ளை நிறத்தில் யானை சிலை வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும். வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைத்தால் மிகவும் சிறந்தது.