
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுடன் சிறுமி வசித்து வந்தார்.
சிறுமியின் தந்தையான 66 வயது முதியவர் ஊருக்கு வந்தபோது திரும்பிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்தனர்.
திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையின் போது நேற்று (டிசம்பர் 11) விசாரணைக்கு வந்த நிலையில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர் முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.