
நம் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சூழ்நிலையால் கடன் வாங்கும் நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்படுகிறோம். மேலும் தொடர்ந்து ஏற்படும் எதிர்பாராத சிரமங்கள் மற்றும் எதிர்பாராத செலவுகளாலும் நாம் தொடர்ந்து கடனாளியாகவே இருக்கும் சூழ்நிலை அமைகிறது. இந்நிலையில், கடனை அடைத்து நிம்மதியாக வாழ இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
அம்மாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நாம் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.
அம்மாவாசை நாளன்று தலைக்கு குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வீட்டு பூஜை அறை அல்லது குலதெய்வ கோயிலுக்கு சென்று அங்கு ஒரு பெரிய மன்னாக்கள் விளக்கு வைத்து அதில் கல் உப்பு நிரப்பி அதன் மேல் ஒரு சிறிய மண் அகல் வைக்க வேண்டும் பிறகு அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இரட்டை பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் வழிபட்டால் கடன் விரைவாக அடைந்து கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை நாம் வாழ முடியும். இவ்வாறு ஒவ்வொரு அமாவாசை தினத்தில் என்றும் இந்த மாதிரி கடவுளை வழிபட்டு வந்தால் மொத்த கடனும் நீங்கி மனநிம்மதியுடன் நீங்கள் இருப்பீர்கள்.