கண்பார்வைக்கு உதவும் பொன்னாங்கன்னி கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்..!!

 

கீரைகள் என்றாலே நமது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் உணவுகளில் ஒன்றாகும். பலவையாக கீரைகள் இருந்தாலும் ஒவ்வொரு கீரைக்கும் வித்தியாசமாக பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அந்த பொன்னாங்கன்னி கீரையில் உள்ள சத்துக்கள் மற்றும் அதை வைத்து ஒரு சிறப்பான கீரைக்கூட்டு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.பொன்னாங்கன்னி நாட்டு பொன்னாங்கன்னி மற்றும் சீமை பொன்னாங்கன்னி என இரு வகைகள் உள்ளது.இதில் நாட்டு பொன்னாங்கன்னி, பொதுவாக பச்சை நிற இலைகளைக் கொண்டது. இதில் தான் அதிக மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சீமை பொன்னாங்கண்ணி இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற இலைகளைக் கொண்டது. இது பெரும்பாலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது, மருத்துவ குணம் சற்றுக் குறைவு என்று கூறப்படுகிறது.பொன்னாங்
கண்ணி கீரையில், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இந்த கீரையின் மிக முக்கியமான பயன்களில் ஒன்று கண் பார்வை மேம்படுத்தும். இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், இது கண் எரிச்சல், மங்குதல், கண் வலி, மாலைக்கண் நோய் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.தொடர்ந்து 27 நாட்கள் இக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும் என்று சொல்லப்படுகிறது.

Read Previous

பித்தப்பை கற்கள் கரைய வெளியேற வீட்டிலேயே எளிய முறையில் மருத்துவம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

சர்க்கரை நோய் உள்ளவர்கள் – அவசியம் சாப்பிட வேண்டியது இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular