ஆதி காலங்களில் கருப்பு கவுனி அரிசி பயன்பாட்டில் உள்ளது, தற்போது கருப்பு கவுனி அரிசியின் பயன்பாடு தெரியாமலே மக்கள் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் அரிசி சமைத்து சாப்பிடுவதில் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டனர்..
ஆசிய கண்டத்தில் பரவலாக கிடைக்கும் சகாவோ வகை அரிசி கருப்பு கவுனி அரிசி ஆகும், தனக்கான ஒரு தனி அடையாளத்தை கொண்டுள்ளது, இவற்றில் வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் நியாசின் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது, இதனை சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் தோன்றும், உடலின் சர்க்கரை மற்றும் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது மேலும் கண்களுக்கு ஆரோக்கியத்தை தருகிறது, சீனாவில் விரும்பி உண்ணப்படும் இவ் அரிசையில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாகவே உள்ளது, ஆந்திரசைனைன் இதன் வேதிப்பொருளை உண்டு பண்ணுகிறது இதனால் கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் நிறைந்து காணப்படும்..!!