ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பிரபல லாட்டரி குலுக்கலில் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தனு ஷெட்டிகர் என்பவர் 20 மில்லியன் திராம் (சுமார் ரூ. 49 கோடி) பரிசுத் தொகையை வென்றுள்ளார். ஓமனில் பணிபுரியும் சாந்தனு, 500 திராம் (சுமார் ரூ. 12,300) கொடுத்து லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.




