லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் ஒரு படம்தான் கூலி. இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினிகாந்தின் கடைசி படமான வேட்டையன் கலவையான விமர்சனம் பெற்றதால் இந்த படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கூலி படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் முடிவடைந்த நிலையில் இசைப் பணிகளும் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று இந்த படத்தின் ஒரு அப்டேட்டை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் அதைக் கேட்டதிலிருந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்த அப்டேட் படத்தின் ஏதேனும் ஒரு பாடலைப் பற்றி இருக்கலாம் அல்லது ரிலீஸ் தேதியை பற்றி இருக்கலாம் என்று மக்கள் நினைக்கின்றனர்.




