இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி நேற்று நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டியில் அபிஷேக் ஷர்மா சதம் (100 ரன்கள்) அடித்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் சாதனை ஒன்றை சமம் செய்துள்ளார்.
அதாவது சர்வதேச டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் (46) சதம் விளாசிய 3வது வீரர் என்ற கே.எல்.ராகுலின் சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சூர்ய குமார் யாதவும் (45), முதல் இடத்தில் ரோஹித் சர்மாவும் (35) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.