சுண்டைக்காய் மற்றும் சுண்ட வத்தல் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..??
சுண்டைக்காய் மற்றும் சுண்டவத்தல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றிதான் தற்போது நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
சுண்டைக்காய் அளவில் சிறியதாக இருந்தாலும் அதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. அது மட்டுமின்றி சுண்டவத்தல் என்பது காய்கறியை காய வைத்து செய்யப்படும் ஒரு வகை பதப்படுத்தப்பட்ட உணவு முறையாகும் இதுவும் சுண்டைக்காயின் அதே நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுண்டைக்காய் மற்றும் சுண்டவத்தலின் நன்மைகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மற்றும் சுண்டைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை தடுக்க மிகவும் உதவுகிறது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. சுண்டைக்காயில் உள்ள சில சேர்மங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என ஆராய்ச்சியில் கூட கண்டறியப்பட்டுள்ளது. எடையை குறைக்க உதவுகிறது. சுண்டக்காயில் கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக இதனை உட்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்கிறது.




