
இன்றைய நவீன காலகட்டத்தில் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தாலும் பலர் அதை தவிர்த்து பல காரணங்களால் சத்தான உணவு முறையை பின்பற்றாமல் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல ஜூஸ்கள் இருக்கின்றன அந்த வகையில் சுரக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சுரக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. மேலும் இதை ஜூஸ் செய்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள சத்துக்களை நாம் பெறலாம். சுரைக்காய் சாம்பார் வைத்தோ அல்லது பொரியல் வைத்தோ கூட சாப்பிடலாம். ஆனால் ஒரு சிலர் இதை ஜூஸாக செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த சுரைக்காய் ஜூஸ் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் வகையில் அமைகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த சுரக்காய் ஜூஸ் உதவுகிறது. மேலும் உடல் எடையை இழப்பவர்கள் கூட இந்த ஜூஸை குடிக்கலாம். அதுமட்டுமின்றி, சுரைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸை அருந்துவதால் அதிலிருந்து விடுபடலாம். மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இந்த சுரைக்காய் ஜூஸ் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். அதுமட்டுமின்றி, சருமத்தை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இந்த சுரைக்காய் ஜூஸ் உதவுகிறது. சுரக்காய் ஜூஸ் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.