சொந்த மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை..!! கருக்கலைப்பு செய்த கொடூரம்..!!

தந்தை தனது சொந்த மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா, பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 56 வயது நபர். இவர் தனது மகள்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், மனைவியை சித்ரவதை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மூத்த இன்ஸ்பெக்டர் அவிராஜ் குர்ஹாடே, “குற்றம் சாட்டப்பட்டவர் சோட்டா ராஜன் கும்பலுடன் தொடர்புடையர் என தெரியவந்துள்ளது.

மேலும் அவர் தனது இரண்டு மகள்களை 2018 முதல் பிப்ரவரி 2025 வரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களில் ஒருவரை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் தனது மனைவியை அடித்து சித்திரவதை செய்துள்ளார். மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயரில் 6 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

நாம் வாழும் நாட்கள் குறைவு, ஆனால் நாம் செய்யக்கூடிய நல்லவை அதிகம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஹனிமூனுக்கு ‘ஹனிமூன்’ என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?.. காரணம் இதுதான்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular