
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட அலுவலக கட்டமைப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுச் செயலாளர் ஆனந்திற்கு தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்…
2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுத பணிகளை ஆளும் திமுக கட்சி கடந்த ஜூலை மாதத்திலேயே தொடங்கிவிட்டது அமைச்சர்கள் கே என் நேரு, வேலு, தங்கம் தென்னரசு உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்ட பல்வேறு கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் 234 தொகுதிகளும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு முதலமைச்சரையும் சந்தித்து விட்டனர், தமிழ்நாட்டை பலமுறை ஆட்சி புரிந்த அதிமுகவுக்கு களப்பணி என்பது அடுத்தபடியான விஷயமே உட்கட்சி பிரச்சனைகள் சுற்றி இருந்த அதிமுக தேர்தல் நடந்த தொடங்கியுள்ள நிலையில் விழித்துக் கொண்டுள்ளது அக்கட்சி அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 10 பேர் கொண்ட களப்பணி ஆய்வுக் குழுவை பொதுச் செயலாளர் இ பி எஸ் அமைத்துள்ளார், இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் அக்கட்சியின் செயலாளர் ஆனந்திற்கு கட்டளையிட்டுள்ளார்..!!