2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தமாகா கட்சியினரிடம் 4 கட்டங்களாக விருப்பமனுக்கள் பெறப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதற்கான கூட்டங்கள் வரும் பிப்.7,14,17 மற்றும் பிப்.19- ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்தந்த மண்டல கூட்டங்களில் கலந்துகொண்டு தங்கள் விருப்பமனுக்களை அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




