பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பல நாடுகள் கலந்து பதக்கங்கள் வென்று கொண்டிருக்கையில் மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்..
பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்றார் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.85 மீட்டர் உயரம் தாண்டி அவர் அசத்தியுள்ளார், இதன் மூலம் 2014இல் தங்கம் மற்றும் 2020இல் வெள்ளி தற்போது 2024 வெங்கலம் என ஒலிம்பிக்ஸ் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் என்று முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையும் அவர் படைத்துள்ளார், மேலும் இவரின் சாதனையானது தமிழ்நாட்டிற்கு பெரும் பெருமையை சேர்த்ததுள்ளது என்று பலரும் இணையதள பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர், பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் இவரின் சாதனையை தமிழகத்தின் வெற்றி என்றும் தங்களின் இணையதள பக்கத்தில் கூறி வருகின்றனர்..!!