
தமிழ் சினிமா உலகின் மிக முக்கியமான, அதிக ரசிகர்களை கொண்ட ஒருவர்தான் விஜய். இவரை அவரது ரசிகர்கள் செல்லமாக தளபதி என்று கூறுவார்கள். தளபதி விஜய் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கியதாக அறிவித்திருந்தார். அதற்கு பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்றும் அறிவித்தார். பின்னர் அந்த கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாநாடும் நடந்து முடிந்துவிட்டது. அந்த வகையில் கடைசியாக ஒரு செயற்குழுவில் பேசிய விஜய் அவர்கள் அடுத்ததாக பூத் ஏஜெண்டுகளுடன் ஒரு மாநாட்டை நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இப்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் லெவல் ஏஜெனட்ஸ் மாநாடு கோவையில் நடத்த விஜய் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் மூலமாக 60,000 பூத் ஏஜெண்டுகளை நியமிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் பூத் ஏஜெண்டுகள் மாநாட்டை விஜய் அவர்கள் மண்டல வாரியாக நடத்த திட்டமிட்டு வருகிறார்.
அப்படி முதல் மாநாடு கோவையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்களும் தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் அவர் மாநாட்டில் என்ன பேச போகிறார் என்பதற்காகவே ஒரு பெரிய பட்டாளம் காத்திருக்கிறது.