திடீர் மாரடைப்பு சிபிஆர் முதலுதவி கொடுப்பது எப்படி..!!

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது அது இளம் வயதினராக இருக்கட்டும் அல்லது இளம் வயதை கடந்தவராக கூட இருக்கட்டும் ஆனால் அவர்கள் சாப்பிடும் உணவு முறை மற்றும் அவர்களின் உடல் பிரச்சினைகள் இவற்றினால் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது, மேலும் தற்சமயம் இந்தியாவில் அதிகம் ஆரம்பிப்பு இளம் வயதினரை தாக்குகிறது என்று ஆய்வும் வெளிவந்துள்ளது..

திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தவிக்கின்றவர்களை சிபிஆர் முதலுதவி மூலம் காப்பாற்ற முடியும், மாரடைப்பு ஏற்பட்ட வரை தரையில் படுக்க வைத்து நமது உள்ளங்கையை அவர் மார்பில் பதியுமாறு வைத்து நமது மற்றொரு கையால் வைத்து அழுத்த வேண்டும், ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சற்று இடைவெளி விட்டு மீண்டும் அழுத்த வேண்டும், இப்படி செய்வதன் மூலம் நின்று போன இதயத்துடிப்பு மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும், பின்னர் அவர் வாய் மீது வாய் வைத்து சுவாசத்தை உள்ளே அனுப்பும் பொழுது அவர்களின் உடல் முழுவதும் ஆக்சிஜன் பரவி மூச்சுக்காற்று மீண்டும் வெளி வருவதற்கான வாய்ப்பு ஏற்படும், அவசர ஊர்திகள் வரும் வரை இந்த முதலுதவி செய்தன் மூலம் மாரடைப்பு ஏற்பட்டவரை காப்பாற்றுவதற்கு சிறந்த பலன் தரும்..!!

Read Previous

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வீட்டு உரிமையாளர் மகன்..!!

Read Next

பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular