பீகாரில் மாஸ்க் அணிந்த கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்து வருவதால், நகைக்கடைகளுக்குள் ஹிஜாப், புர்கா மற்றும் மாஸ்க் அணிந்து வர அம்மாநில நகை வியாபாரிகள் சங்கம் தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பின்னால் மத ரீதியான பாகுபாடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இத்தடை மத சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், கண்காணிப்பை மேம்படுத்துவதை விடுத்து ஆடைகளில் கட்டுப்பாடு விதிப்பது முறையல்ல என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.




