
நாக பஞ்சமி தினத்தில் கனவில் யார் தலையிலாவது பாம்பு அமர்ந்திருப்பது போல் தெரிந்தால் முன்னோர்களின் அருள் அவர் மீது இருக்கிறது என அர்த்தம். புதையலை காக்கும் பாம்பை கண்டால் கனவு காண்பவருக்கு விரைவில் பணம் கொட்டும் என்பது ஐதீகம். ஆண் பாம்பும் பெண் பாம்பும் பின்னி பிணைந்திருப்பது போல் வந்தால் அது கெட்ட சகுனமாகும். பாம்பு உங்களை கடிப்பது போல் கனவு வந்தால் உங்களுக்கு விபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தமாகும்.