நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட காவலர் கண்காணிப்பு அலுவலகத்தில் இன்று மனு தரப்பட்டுள்ளது..
தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் 30க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மனு ஒன்றை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ராஜேஷ் கண்ணனிடம் வழங்கப்பட்டுள்ளது, அதில் தமிழ் புலி கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களை கொலை மிரட்டல் விடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் மேலும் கூலிப்படை கும்பலை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவகல் எழுதப்பட்டுள்ளது..!!