
நாளை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை “ஃபெங்கல்” புயலாக வலு பெறவுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தொடர் கனமழை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(27.11.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.நமச்சிவாயம் அவர்கள் அறிவித்துள்ளார்.