
வெயிட் லாஸ் பண்ணனும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த ரெசிபியை சாப்பிட்டுக்கிட்டே வெயிட் லாஸ் பண்ணலாம். அது மட்டும் இல்லாம வெயிட் லாஸ் பண்றவங்களுக்கான ரெசிபியும் கூட இது. அட கொள்ளு கஞ்சி தாங்க. கொள்ளு சாப்பிட்டு உடம்பை இளக்கலாம் அப்படின்னு பெரியவங்க சொல்லி கேள்விப்பட்டிருப்போம் . கொள்ள இப்படி சாப்பிட்டு உடம்பை இழக்கலாம்.இந்த ரெசிபி புழுங்கல் அரிசி மற்றும் மட்டா ரைஸ் கூட சேர்த்து செய்யலாம். அது எப்படி பண்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி -ஒரு கப
கொள்ளு – முக்கால் கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 5 கப்
செய்முறை:
கொள்ளை கடாயில் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.கொள்ளு ஆரிய பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரே ஒரு பல்ஸ் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரிசி வறுத்து பொடி செய்த கொள்ள சேர்த்துக் கொள்ளவும்.தண்ணீர் ஊற்றி இரண்டு தடவை அரிசியை கழுவிய பின் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.குக்கரில் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் ஊற வைத்திருந்த அரிசி கொள்ளை இரண்டையும் குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கினோமானால் கொள்ளு கஞ்சி தயார். இதை சாப்பிட்டு சொல்லுங்க எவ்வளவு டேஸ்டா இருந்துச்சுன்னு. வெயிட் லாஸ் பண்றவங்க தாராளமா இத குடிச்சிட்டு வெயிட் லாஸ் பண்ணுங்க.