
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுர குடிநீர் பயன்கள்..!!
கபம் என்றால் சளி, சுரம் என்றால் காய்ச்சல் அதாவது சளி காய்ச்சலை அகற்றுவது தான் கபசுரம். ஆடாதோடா இலை கற்பூரவள்ளி இலை மற்றும் சுக்கு மற்றும் மிளகு உள்பட 18 வகையான மூலிகைப் பொருட்களை கலந்து செய்தல் தான் கபசுர குடிநீர். நுரையீரலில் கபம் கட்டி சுவாசப் பாதையை அடைத்துக் கொண்டு மூச்சு விட முடியாமலும் சளி வெளியே வராமலும் இருக்குமாம். இவ்வாறு இருக்கும் பொழுது கபசுர குடிநீர் பயன்படுத்துவதால் சுவாசப் பாதை விரிவடைந்து கபத்தை வெளியேற்றும். இதில் உள்ள மூலிகைகள் மார்பு சளியை கரைத்து மூச்சு இரைப்பு இருமலை கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஒரு வீட்டில் ஐந்து பேர் இருந்தால் 5 கிராம் கபசுரப் பொடியை எடுத்து பாத்திரத்தில் போட்டு ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நீங்கள் ஊற்றிய தண்ணீர் பாதியாக குறையும் அளவுக்கு காய்ச்ச வேண்டும். பின்னர் ஒவ்வொருவரும் அரை டம்ளர் அளவுக்கு காலை மாலை என ஐந்து நாளுக்கு குடித்தால் சளி மற்றும் காய்ச்சல் எதுவும் வராது. காலையில் குடிக்கும் போது சாப்பிட்டுவிட்டு குடிக்கக்கூடாது.