
நேற்று முன்தினம் இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்கள் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த செய்தி தமிழகத்தையே அதிர்ச்சி உள்ளாக்கியது, இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்ற தற்பொழுது தெரிய வந்துள்ளது.
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் உயிருக்கு சிலரால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்றுள்ளார். சுமார் ஒன்பதில் இருந்து 20 லட்சம் வரை பெறுமானம் உள்ள துப்பாக்கியை இத்தாலியிலிருந்து இவர் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலின் போது துப்பாக்கியை சென்னை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆம்ஸ்ட்ராங் தான் கடந்த ஜூன் 13ஆம் தேதி தனது துப்பாக்கியை காவல்துறையிடம் இருந்து திரும்பி பெற்றுக் கொண்டார்.
Beretta Tom cat type 3032 வகையை சார்ந்த இந்த துப்பாக்கி ஒரே நேரத்தில் 9 ரவுண்டுகள் வரை சுடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கி வைத்திருப்பதற்காக ஆல் இந்தியா லைசென்ஸை பெற்றுள்ளார். எங்கு சென்றாலும் தன்னுடைய இந்த துப்பாக்கியை கொண்டு செல்வதையும் வழக்கமாய் கொண்டுள்ளார் .இதை தொடர்ந்து எப்போதெல்லாம் துப்பாக்கி வைத்திருப்பார் என்று கொலையாளிகள் நீண்ட நாட்களாக அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பிரியாணி கடையில் இன்று நோட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சம்பவத்தின் போது ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் வெளியே நின்று போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் துப்பாக்கி இல்லை என்ற தகவல் கிடைத்ததை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அருவாளால் வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடி உள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.