படித்ததில் பிடித்தது: உங்கள் மருமகள் உங்கள் மகள் அல்ல..!!

உங்கள் மருமகள் உங்கள் மகள் அல்ல.

 

உங்கள் மருமகள் உங்கள் மகள் அல்ல, எனவே அவர் உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை. ஒரு மாமியார் தனது மருமகளை ஒரு மகளாக உணரும் அளவுக்கு நேசிக்கும்போது கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது.

 

ஆனால் உங்களுக்கு கீழ்ப்படிவதற்கு அல்லது நீங்கள் சொல்வதை செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்த, அவள் உங்கள் மகள் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

 

மாமியாராக உங்கள் பங்கு அமைதியாக கவனிக்கவும், சில நேரங்களில் அமைதியாக இருக்கவும் வேண்டும், மேலும் உங்கள் கருத்தை கேட்டால், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவர்களை கேட்டு, அவர்களை தாங்களே முடிவெடுக்க வழிவகுப்பதுதான் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த செயல். அவர்கள் உங்களிடம் உதவி கேட்டால், அவர்களுக்குத் தேவையான விதத்தில் உதவுங்கள், நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல.

 

உங்கள் மருமகள் திறமையான பெண்

 

அவளால் பெரிய காரியங்களைச் செய்ய முடியும்: அவள் ஒரு குடும்பத்தை நன்றாக வளர்க்க முடியும்; அவள் உங்கள் மகனுக்கு சரியான துணையாக இருக்க முடியும். அவள், அவளாக இருப்பதற்கான சுதந்திரத்தை அவளுக்குக் கொடுங்கள்.

 

முழு குடும்பத்திற்கும், குறிப்பாக உங்கள் மகன் மற்றும் உங்கள் வருங்கால பேரக்குழந்தைகளுக்கு அவளுடைய சிறந்த திறனைக் காட்ட அனுமதியுங்கள். “உனக்கு ஒன்னும் தெரியாது” என்று கூறி சங்கடப்படுத்தாதீர்கள்.

 

அவளை உற்சாகப்படுத்துங்கள் ! உங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக அவள் இருப்பது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துங்கள். அவளுக்கு தன்னம்பிக்கை கொடுங்கள், அவள் அடையும் ஆனந்தத்தை பாருங்கள். அவளை ஒருபோதும் விமர்சிக்க வேண்டாம், மற்றவர்களையும் விமர்சிக்க அனுமதிக்காதீர்கள், முக்கியமாக உன்னால் முன்னாள் உங்கள் மகன் கூட அவளை விமர்சிக்க அனுமதிக்க வேண்டாம். தவறுகளை சுட்டிக்காட்டுவது வேறு. விமர்சிப்பது வேறு.

 

உன் மருமகளும் கற்றுக்கொள்கிறான்:

 

அவளும் , உங்கள் காலத்தில் நீங்கள் கற்றுக்கொண்டதை போலவே கற்றுக் கொண்டிருக்கிறாள். பொறுமையாக இருங்கள், அவள் கேட்டால், எப்படிச் செய்வது என்று அவளுக்குக் காட்டுங்கள், ஆனால் முயற்சியை மருமகளே செய்யட்டும். உங்கள் மருமகள் உங்கள் பேரக்குழந்தைகளின் தாய் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

தேவையற்ற மோதல்களை உருவாக்காதீர்கள்

 

மகனுக்கும், மருமகளுக்குமான சண்டையில், மருமகளை பிடிக்கவில்லை என்பதற்க்காக, உங்கள் மகனுடன் சேர்ந்து

உங்கள் வெறுப்பை காட்டாதீர்கள். உங்கள் மகன் எப்போதும் மருமகள் பக்கம் நிற்பார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் தலையிட்டால் நீங்கள் காயப்படுவீர்கள்.

 

**அவளுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள்**

 

காயப்படுத்தாத வார்த்தைகளின் மூலம் அவளை நேசியுங்கள். அவள் உங்களை போன்ற ஒரு பெண்: ஒரு தாய், ஒரு மனைவி, கடவுளின் மகள், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் மகன் நேசிக்கும் பெண். அதை நீ மறந்து விடாதீர்கள்.

 

உங்கள் மகனின் எதிர்காலத்தை நீங்களே பிடித்து கீழே இழுத்து விடாதீர்கள்..

Read Previous

செந்தில் பாலாஜி விடுதலையாவதில் சிக்கல்..!!

Read Next

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகளின் பேருந்து..!! 29 பேர் மீட்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular