குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்தான வகையில் இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி மாவு
1_1/2 கப் வெல்லம்
2 கப் தண்ணீர்
1 முழு தேங்காய் துருவல்
200 கிராம் பாசிப்பருப்பு
100 கிராம் கடலைப்பருப்பு
2 ஸ்பூன் ஏலத்தூள்
100 மில்லி நெய்
சமையல் குறிப்புகள்
பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு எடுக்கவும் பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி வேறு தண்ணீர் ஊற்றி மலர வேகவிடவும் பின் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்
கொதித்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டியில்லாமல் கிளறவும் பின் துருவிய தேங்காய் மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பு கடலைப்பருப்பை தண்ணீர் வடிகட்டி சேர்த்து நன்கு கிளறவும் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறி நெய் விட்டு நன்றாக கிளறி இறக்கவும் பின் நன்கு ஆறவிட்டு பிசைந்து கொள்ளவும்
பின் பிடி கொழுக்கட்டை போல் உருண்டை பிடித்து வைக்கவும் பின் ஆவியில் 12 _15 நிமிடங்கள் வரை வேகவிடவும் சுவையான ஆரோக்கியமான மணமான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி. உங்க வீட்ல இது செஞ்சு கொடுத்து பாருங்க குழந்தைங்க மட்டும் இல்லாம பெரியவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..