நம் அனைவரும் அன்றாட வாழ்வில் முகத்திற்கு தரும் முக்கியம் உடலுக்கு கொடுக்கிறோமா என்பது கேள்வி குறித்தான். அதிலும் குறிப்பாக கால் பாதம் இதை நாம் அனைவரும் கண்டு கொள்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் பலர் வெடிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். நம் உடலை முழுவதுமாக தாங்கும் இந்த பாதத்தை சற்று கூட கவனிப்பதில்லை. உடல் பருமன் ஆனவர்கள் மற்றும் உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வேலைக்கு செல்லும் போது நீண்ட நேரம் நிற்பதால் மற்றும் அழுக்கான பகுதிகளில் காரணிகளை அணியாமல் வேலை செய்பவர்கள் போன்றோருக்கு இந்தப் பித்த வெடிப்பு வந்து பாடாயப்படுத்தும். சில சமயங்களில் இந்தப் பித்த வெடிப்பு என்பது வெடிப்பு பிளந்து ரத்தம் கூட வரும். வலி அதிகமாக இருக்கும்.
இதை சரி செய்வதற்கு தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். ஏனென்றால் நீர்ச்சத்துக் குறையும்பொழுது நமது தோல் வறண்டு விடும் இதனால் பாதத்தில் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுப்பதற்கு, இரவில் தினமும் கால்களை மிதமான வெந்நீரில் வைத்து ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து நன்றாக கழுவி மாயிஸ்ட்ரைசர் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவையும் இதற்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் லேசாக பித்தவெடிப்பு வந்த உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.




