
தற்பொழுது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி இந்துக்களை இழிவு படுத்தியதாக கூறி புதுவையில் பாஜக இளைஞரணியினர் ராகுல் காந்தியின் உருவப்படத்தினை எரித்தும், கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய முன் தினம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசியுள்ளார், அப்பொழுது பேசிய ராகுல் காந்தி பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.
இதனை தொடர்ந்து இந்துக்கள் அனைவரும் வெறுப்பை வளர்க்கின்றனர், வன்முறையை தூண்டுகின்றனர் என்றும் ராகுல் காந்தி இந்துக்களை இழிவாக பேசியுள்ளதாக ராகுல் காந்தி இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் உள்ள பாஜக இளைஞரர் புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தியின் உருவப்படத்தை பாஜக இளைஞர் அணி கிழித்தும், நெருப்பு வைத்து கொளுத்தியும் தங்களது எதிர்ப்பினை காட்டி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜகவினரை புதுச்சேரி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையில் ஏற்கனவே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.