புரட்டாசி மாதத்தில் பலரும் அசைவம் சாப்பிடுவதில் தவிர்த்து வருகின்றனர், புரட்டாசி என்றாலே பெருமாளுக்கு உகந்த வாரமாகவும் அந்த வாரங்களில் விரதம் இருந்து தெய்வங்களை வணங்கி வருவது வழக்கம், புரட்டாசி மாதத்தில் எல்லோரும் கறி சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்..
இந்த மாதம் புரட்டாசி தொடங்கி உள்ள நிலையில் இம்மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று கூற்று உள்ளது, இந்த மாதத்தில் தான் வெயில் குறைந்து மழை ஆரம்பமாகும் ஏற்கனவே சூடாக இருக்கும் பூமி மழை நீரை உள்வாங்கி வெப்பத்தை வெளியிடும், இது வழக்கமான வெப்பத்தை விட அதிக உஷ்ணமாக இருக்கும் இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல் மேலும் சூடாகும் என்பதனாலேயே அசைவத்தை தவிர்க்க வேண்டும் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர், மேலும் புராணங்கள் ரீதியாக முன்னோர்கள் வீதியாகவும் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து ஐந்து வாரம் கறி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விரதத்தோடு அந்த வாரங்களை கடந்து வருகின்றனர் இவற்றை அறிவியல் ரீதியாக ஒப்பிட்டு பார்க்கையில் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் வேண்டும் என்று இந்த ஐதீகம் பின்பற்றப்பட்டு வருகிறது..!!




