சேலம் மாவட்டத்திற்கு மத்தியப்பிரதேசத்தில் இருந்து பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதை மொத்த வியாபாரிகள் வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். சேலத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.300-க்கு விற்பனை ஆனது. மத்தியப்பிரதேசத்தில் தற்போது பூண்டு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் சேலத்திற்கு வழக்கத்தை விட பூண்டு வரத்து குறைந்து உள்ளது. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை ஆன பூண்டு தற்போது ரூ.100 விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது.
அதே போன்று ரூ.100-க்கு விற்பனையான பொட்டுக்கடலை ரூ.110-க்கும், ரூ.90-க்கு விற்பனையான கடலை பருப்பு ரூ.100-க்கும், ரூ.130-க்கு விற்பனையான உளுந்து ரூ.140-க்கும் என சற்று விலை உயர்ந்து விற்பனையானது. மேலும் பாசிப்பயிறு, மல்லி, மிளகாய் மிளகு, சீரகம் உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சற்று விலை உயர்ந்து விற்கப்படுகின்றன.