சில பெண்களுக்கு ஆண்களைப் போல மூக்கிற்கு கீழே மீசை போல் முடி வளரும். அது பெண்களின் முகத்தில் அழகைக் கெடுப்பது மட்டும் இல்லாமல் பார்ப்போருக்கும் வித்தியாசமான தோற்றத்தை அளிக்கவைக்கின்றது.
இதனை நீக்க பார்லருக்கு சென்று த்ரெட்டிங் செய்து கொள்கிறார்கள் .அப்படி செய்வதால் முடி வளர்ச்சி இன்னும் அதிக அளவில் தூண்டப்படுமே தவிர அது நிரந்தரமாக தீர்வாய் அமையாது. அவற்றை குறைக்க இயற்கையாகவே மருந்து உள்ளது. அதுகுறித்து இப்பதிவில் தெளிவாக காண்போம்,
தேவையான பொருள்
- குப்பைமேனி இலை
- வேப்பங்கொழுந்து
- விரலி மஞ்சள்
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பொருள்களையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நைசாக அரைத்து தூக்க செல்லும் முன் உங்கள் உதட்டின் மேல் பூசிக் கொள்ளவும். காலை எழுந்ததும் அதனை கழுவி விடவும். இப்படி தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வருவதால் முடி அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சென மாறும், இந்த இடத்தில் மீண்டும் முடி வளராது.