பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகும் திரிபலா..!! பல நோய்களை தீர்க்கும் அற்புத சக்தி கொண்டது..!!

பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை அற்புதமான காயகல்பமாகி, எந்த ஒரு நோயையும் தீர்க்கும் அற்புதச் சக்தியைப் பெற்றுள்ளது.

திரிபலா சூரணத்தைத் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.

தோலில் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகள் இருந்தால், இந்தச் சூரணத்தைத் தடவி வந்தால் விரைவில் சரியாகும். தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும். உடல் வலுவாகும், நோய்கள் அண்டாது.

காலில் வெடிப்பு இருந்தால், இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, சுடுநீரில் திரிபலா சூரணத்தைக் கலந்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி திரிபலா சூரணத்தைக் கலந்து, காலை நேரத்தில் சாப்பிடச் சில மணி நேரத்தில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

கடுக்காயில் வாத-கப தன்மையைச் சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.

தான்றிப் பொடி 3 கிராமுடன் சமஅளவு சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிடப் பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல் தீர்ந்து தெளிவுறும். இதன் காயை நீர்விட்டு இழைத்துப் புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தணிந்து குணமாகும்.

தான்றிக்காயைச் சுட்டு மேல்தோலைப் பொடித்து, அதன் எடைக்குச் சமமாய்ச் சர்க்கரை கலந்து தினசரிக் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டுவரப் பல்வலி, ஈறுநோய்கள் போன்றவை குணமாகும்.

நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதிப்படும்.

Read Previous

தகனம் செய்யப்பட்ட நபர்..!! மறுநாள் வீட்டிற்கு வந்த திகில் சம்பவம்..!!

Read Next

கணினி மேம்பாட்டு மையத்தில் 900+ காலியிடங்கள்..!! CDAC தமிழ்நாட்டில் 125 இடங்கள் ஒதுக்கீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular