
பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது Apprentices பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 4000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாப்பு விவரங்கள்:
- Apprentices பணிக்கென காலியாக உள்ள 4000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- ஊதியமாக வழங்கப்படும்.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Examination / Document Verification / Test of local language of the State மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.03.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: