மசாலா டீ குடிக்க நினைப்பவர்கள்.. இந்த மாதிரி போட்டு குடிங்க..!! அம்புட்டு ருசியா இருக்கும்..!!

 

மசாலா டீ எப்படி பண்றதுன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
டீ தூள் – மூன்று தேக்கரண்டி
சுக்குப்பொடி – இரண்டு சிட்டிகை அல்லது துருவிய இஞ்சி – அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் – இரண்டு சிட்டிகை அல்லது மிளகு – ஒன்று
பட்டைத்தூள் – இரண்டு சிட்டிகை அல்லது பட்டை – ஒரு சின்ன துண்டு
கிராம்புத்தூள் – இரண்டு சிட்டிகை அல்லது கிராம்பு – ஒன்று
ஏலக்காய்த்தூள் – இரண்டு சிட்டிகை அல்லது ஏலக்காய் – ஒன்று
தண்ணீர் – மூன்றரை டம்ளர்
செய்முறை
பொடி இல்லாவிட்டால் மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக்கொள்ளவும்.

மூன்றரை டம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும்.கொதிக்கும் தண்ணீரில் டீ தூள் போடவும். பிறகு துருவிய இஞ்சி (அ) சுக்குத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.இப்போது மற்ற அனைத்து பொடிகளையும் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். மசாலா டீ ரெடி. இதனுடன் சூடான பால் மற்றும் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.இல்லையென்றால் சர்க்கரை சேர்த்து, ஒரு டம்ளர் பால் ஊற்றி கொதிக்கவைத்து, இறக்கி பின், வடிகட்டி குடிக்கலாம்.டயட்டில் உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் பால் இல்லாமல் குடிக்கலாம்.இந்த டீ ஒரு முறை குடித்து பார்த்தால் அப்புறம், இதை தான் எப்போதும் குடிக்கத் தோணும்.

 

Read Previous

எலியாமணக்கு செடியில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

ரோஸ் மில்க் குடிப்பதனால் என்ன ஆகும் தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular