இந்த வெயில் காலத்தில் குளிர்ச்சியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று நம் அனைவரும் ஆசைப்படுவோம். அதிலும் மதுரை ஜிகர்தண்டா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இதை எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருள்கள் :
நன்னாரி – 3 டேபிள் ஸ்பூன்
பால் – ஒரு லிட்டர்
பாதாம் பிசின் – ஒரு ஸ்பூன்
பிரஸ் கிரீம் – அரை கப்
சர்க்கரை – அரை கப்
வெண்ணிலா எசன்ஸ் – அரை ஸ்பூன்
பால்கோவா – 2 ஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பாலை ஊத்தி குறைந்த தீயில் 10 நிமிடம் சுண்டும் வரை காய்ச்சவும். அதில் சர்க்கரையை சேர்த்து குறைவான தீயில் பாதி சுண்டும் வரை கொதிக்க வைக்கவும். நிறம் மாறிய பின் ஒரு கப் பாலை எடுத்து தனியாக குளிர வைக்கவும்.
அடுத்து மீதமுள்ள பாலிணை 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். பிறகு பால்கோவா சேர்த்து நன்கு கலந்து பிரஸ் கிரீம் வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வைக்கவும்.
அது ஐஸ்கட்டி ஆனதும் உடைத்து ஜாரில் சேர்த்து அரைக்கவும். கடைசியாக பாதாம் பிசினை இரவில் ஊறவைத்து அடுத்த நாள் காலை இரண்டு ஸ்பூன் நன்னாரி பாதாம் பிசின் பால் ஆகியவற்றை சேர்த்து ஐஸ்கிரீம் போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் மதுரை ஜிகர்தண்டா தயார்.




