நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இஞ்சியை சிறிதளவு சாப்பிட்டால் நமது உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா. அதைப்பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம். தினமும் காலையில் பெண்கள் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலியில் இருந்து சுலபமாக தப்பிக்கலாம்.
இஞ்சி தினமும் சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். மேலும் ஒரு துண்டு இஞ்சி 43 கலோரிகளை குறைக்க உதவி செய்யும். சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் இஞ்சியை சாப்பிட்டால் ரத்த சக்கரை அளவு கட்டுக்குள் வரும். பசி உணர்வை அதிகரிக்கவும் இஞ்சியை சாப்பிடலாம்.
சளி இருமல் போன்ற நோய்களுக்கு இஞ்சி ஒரு சரியான தீர்வாகும். நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள இஞ்சிய நிச்சயமாக சாப்பிடலாம். வெறும் வயிற்றில் இஞ்சியை சாப்பிட்டால் ஞாபகத்திறன் அதிகரிக்கும். புற்றுநோய் செல்கள் கூட வளராமல் இருக்க இந்த இஞ்சியை நிச்சயமாக சாப்பிடலாம்.




