குடும்பம் என்பது ஒரு நதி போன்று…
அந்த நதியை கடக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு படகு தேவை
வெறும் படகை வைத்து அதில் பயணம் செய்ய முடியாது அதற்கு துடுப்பும் அவசியம்..தேவை ..
துடுப்பில்லாமல் படகில் பயணம் செய்ய முடியாது.. வெறும் படகு மட்டும் தான் தண்ணீரில் மிதக்கும்..
படகு தான் கணவன் துடுப்பு தான் மனைவி இந்த இரண்டு பேரும் சேர்ந்தால் தான் குடும்பம் என்ற நதியை கடக்க முடியும்….
படகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தண்ணீரில் மிதக்கலாம் ஆனால் துடுப்பு இல்லாமல் அது நகராது
இப்போதுள்ள காலத்தில் ஒரு குடும்பத்தை நகர்த்தி கொண்டு போவது மனைவி தான் ..
ஒரு குடும்பம் முன்னுக்கு வர வேண்டுமென்றால் அது மனைவியின் கையில் தான் இருக்கிறது…
ஒருவனுக்கு மனைவி மட்டும் நன்றாக அமைந்து விட்டால் அவன் வாழ்க்கை முழுவதும் வசந்தம் தான்…..
கோழை மனைவியாக இருந்தாலும் அவள் குணதியாக இருந்தால் குடும்பம் சிதையாமல் இருக்கும்….




